மட்டக்களப்பு பகுதியில் 13 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை(வீடியோ, புகைப்படம்)

மட்டக்களப்பு – கூழாவடி, இருதயபுரம், மாமாங்கம் சுகாதார பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் 13 கடைகளுக்கு எதிராக நேற்று செவ்வாய்க்கிழமை சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவு தயாரிக்கும் கடைகளில் சுகாதார விதிமுறைகளை பேணாமல் பிளாஸ்ரிக் பொருட்களை பயன்படுத்தி உணவுதயாரிப்பில் ஈடுபட்ட நிலையில் இவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் ஆர. முரளீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய கோட்டமுனை மற்றும் இருதயபுரம் பொதுசுகாதார பரிசோதகர்களான எஸ்.கஜானன், என்.கருணாகரன், ரி.மிதுன்ராஜ், ஜே.யசோதரன், ரி.பகிரதன் ஆகிய பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவதினமான நேற்று இரவு கூழாவடி பிரதேசத்திலுள்ள இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை முற்றுகையிட்டனர்

இதன்போது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த மற்றும் மனித பாவனைக்கு உதவாத உணவு வகைகளை விற்பனை செய்துந்த 13 கடைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு எதிரா வழக்கு தாக்குல் செய்ததுடன் பாவனைக்கு உதவாத பாத்திரங்களை மீட்டனர்.

 

 

 

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172