
மட்டக்களப்பில் மதகுருவால் தாக்கப்பட்ட 8 வயது சிறுவன்
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று முன் தினம் சனிக்கிழமை எட்டு வயது சிறுவனை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுவன் கல்விக்காக சனிக்கிழமை இரவு சென்ற வேளை சந்தேக நபர் குழந்தையை தடியொன்றினால் தாக்கியதாக கிடைக்கபெற்ற முறைப்பாடு ஒன்றினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலினால் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மனப்பாடம் செய்வதற்கு கொடுத்த பாடத்தை முறையாக மனப்பாடம் செய்யாத காரணத்தினால் சிறுவன் தாக்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
