மட்டக்களப்பில் குப்பை தொட்டியாக மாறிக்கொண்டு வரும் பாலம்
மட்டக்களப்பு கல்லடி பாலம் இன்றைய நிலையில் குப்பை கொட்டும் இடமாக மாறிக்கொண்டு வருகின்றது.
வரலாற்று சிறப்பு மிக்க இடமாக காணப்படும் இந்த பாலம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடமாகவும் மக்கள் உடல் பயிற்சிகளில் ஈடுபடுவதற்காகவும் நடை பயணிகள், துவிச்சக்கர வண்டிகள் தங்கள் பயணத்தை மேற்கொள்வதற்காக பயன்படுத்தப்படுகின்றது.
இவ்வாறு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இந்த பாலம் தற்போது குப்பைகள் கொட்டும் இடமாக மாறிகொண்டு வருகின்றது. இந்த வழியாக பயணிப்பவர்கள் தங்களது வீட்டு கழிவுகள், பொலித்தீன் குப்பைகள் போன்றவற்றை பெரிய பொலித்தீன் பைகளில் சேகரித்து குறித்த பாலத்தின் கம்பிகளுக்கு நடுவில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இந்த நிலை தொடர்ந்தால் சுற்றுலா தளமாக காணப்படும் பாலம் எதிர்காலத்தில் குப்பை தொட்டியாக மாறிவிடும் எனவே இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து இதற்குரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்