மட்டக்களப்பில் “கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் வெளியீடு
காகம் வடையை கொண்டு சென்றாலும் சாணக்கியன் தான் வடையை கொண்டு சென்றார் என்று தன் மீது பழி சுமத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
“கிழக்கில் சிவந்த சுவடுகள்” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை முற்பகல் 9 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம் படைப்பில் வெளிவந்த இந்த நூல் வெளியீட்டு விழா செ. பேரின்பராஜா தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிக்கையில்
இந்த புத்தகத்தில் முக்கியமாக குறிப்பிட்டு சொல்லக் கூடிய விடயங்கள் காணப்பட்டாலும் நான் அவற்றை இந்த இடத்தில் கூறினால் சாணக்கியன் கூறியே இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதாவது காகம் வடையை கொண்டு சென்றாலும் சாணக்கியன் தான் வடையை கொண்டு சென்றார் என்று கூறப்படும் என தெரிவித்தார்.
மேலும் நிகழ்வில் முதல் பிரதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் பெற்று கொண்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகம் வழங்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்