மகனுடன் மருந்து எடுக்கச் சென்ற தாய் பரிதாபமாக உயிரிழப்பு

தனது மகனுடன் வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திறப்பனை, நிரவிய பகுதியை சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா (வயது – 50) என்ற தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த தாய் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது வீதியில் நின்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.

யானையின் தாக்குதலில் காயமடைந்த தாய் உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திறப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்