பெண்ணொருவரிடமிருந்து மதுபான போத்தல்கள் பறிமுதல்!

-யாழ் நிருபர்-

நீண்ட காலமாக சட்டத்துக்கு புறம்பாக மதுபானம் விற்பனை செய்த பெண்ணொருவர் இன்று திங்கட்கிழமை மதுபான 27 கால் போத்தல்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கால் போத்தல் சாராயம் ஒன்றினை ரூபா ஆயிரத்திற்கு விற்பனை செய்து வந்ததாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24