பூனையின் ஆசிர்வாதத்தை பெற குவியும் மக்கள்

சீனாவிலுள்ள பிரபல ஜி யுவான் ஆலயத்திலுள்ள பூனையொன்று பொதுமக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் காணொளியொன்று பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவின் சுஜோவிலுள்ள ஜி யுவான் ஆலயத்திற்கு வருகைத்தரும் பக்தர்கள், அங்குள்ள பூனையைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்த ஆலயத்திலுள்ள பூனையின் கழுத்தில் ஒரு தங்க நிற சங்கிலியும் அணிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை வரவேற்க தன் பாதத்தை நீட்டி ஹை – ஃபை போன்று செய்யும் இந்த பூனையின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு குறித்த ஆலயத்திலுள்ள பூனையிடம் ஆசிர்வாதம் பெறுவதன் மூலம் அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும் என்று நம்பப்படுகின்றது. அத்துடன் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பூனையைச் சந்திக்க ஜி யுவான் ஆலயத்திற்கு வருகைதருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24