புதையல் தோண்டிய இருவர் கைது
பொலன்னறுவை – வெலிகந்த, நாகஸ்தென்ன பகுதியில் உள்ள தோட்டத்தில் புதையல் தோண்டிய இரண்டு பேர் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிக்கந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளது.
புதையல் தோண்டும் போது தப்பிச் சென்ற மீதமுள்ள குழுவை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்