
புது டெல்லியில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியாவின் புது டெல்லியில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடக்கக்கூடும் என கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் எச்சரிக்கையைத் தொடர்ந்து இரண்டு பாடசாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களை வீட்டிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் பாதுகாப்பு படையினர் மற்றும் பொலிஸார், மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, நொய்டாவில் உள்ள நான்கு பாடசாலைகளுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான மின்னஞ்சல் கிடைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன