
பாவனைக்கு உதவாத 300 கிலோகிராம் கருவாடு மீட்பு
-பதுளை நிருபர்-
பாவனைக்கு உதவாத பழுதடைந்த 300 கிலோகிராம் கருவாடும், கருவாடு விற்பனைக்காக கொண்டு செல்வதற்கான லொறி ஒன்றினையும் கைப்பற்றியுள்ளதாக ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
ஹாலிஎல நகர் பகுதி மற்றும் சந்தைகளில் பாவனைக்கு உதவாத கருவாட்டினை விற்பனை செய்வதாக சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து உடன் குறித்த களஞ்சியசாலையை பரிசோதித்த சுகாதார அதிகாரிகள் பாவனைக்கு உதவாத 300 கிலோகிராமிற்கும் அதிகமான கருவாட்டினை மீட்டுள்ளனர்.
குறித்த வியாபாரியான சந்தேக நபரை நாளை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் குறித்த களஞ்சியசாலை சுகாதார அதிகாரிகளினால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பு ஹாலிஎல சுகாதார வைத்திய அதிகாரிகள் ஆர்.எம்.பீ.பீ.விஜேசோம மற்றும் பிரசாத் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

