பாணுக்குள் பீடி: பெண்ணுக்கு அதிர்ச்சி
மாத்தறையில் பெண் வாங்கிய பாணுக்குள் இருந்து இன்று சனிக்கிழமை காலை பீடி துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலையில், தன் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதற்கு முன், ஒரு பாணை வெட்டி குழம்புடன் சாப்பிடும்போது குறித்த பீடியை பார்த்துள்ளார். முதலில் கறிவேப்பிலை என நினைத்து நசுக்கி பார்த்ததில் அது பீடி என தெரியவந்துள்ளது.