பாடசாலையினுள் நுழைந்த கொம்பன் யானை: பயத்தில் மாணவர்கள்

அநுராதபுரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் கொம்பன் யானை பாடசாலைக்குள் நுழைந்துள்ளது.

கலென்பிந்துனுவெ​வ கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பன்டுலுகம மகா வித்தியாலயத்திற்குள்ளேயே இந்த கொம்பன் யானை புகுந்துள்ளது.

குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்திற்குள் புகுந்த கொம்பன் யானையை பார்த்ததும் மாணவர்கள் படிப்பை நிறுத்திவிட்டு பாடசாலையை விட்டு வெளியே வந்துள்ளதுடன் பின்னர் அக்கம் பக்கத்தினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் இணைந்து யானையை விரட்டியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் கருத்து தெரிவிக்கையில், யானை வேலி ஒன்றை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்