பாடசாலைகள் மூடப்படும் தினங்கள் அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அனைத்து அரச பாடசாலைகளும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்குமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.