பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, புத்தாண்டு கொண்டாட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பிற நிகழ்வுகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதால் கோட்டை, புறக்கோட்டை (காலி முகத்திடல்) பொரளை, கிருலப்பனை மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளுக்கும், மதத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கும் வருகை தரும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 6,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

மேலும், அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க விசேட போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் போக்குவரத்தை கையாளுவதற்கும் நாடு முழுவதும் 35,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த காலகட்டத்தில் போக்குவரத்து அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க