படகை கடலுக்குள் தள்ளச் சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- அலஸ்தோட்டம் பகுதியில், கடலுக்கு செல்வதற்கு படகை தள்ளச் சென்றவர், அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், திருகோணமலை-அலஸ்தோட்டம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 53) என  தெரியவந்துள்ளது

சடலம் மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.