நெடுங்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

புத்தளம் நெடுங்குளம் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று நீரில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தில்லையடி பகுதியைச் சேர்ந்த ராமைய்யா நடேசன் ( வயது – 67 ) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுங்குளம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை காலை குறித்த நபர் உடைகளை குளத்தின் கரையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றுள்ளார். வெகு நேரம் சென்றும் திரும்பாததால் இதனையடுத்து, அப்பகுதி மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதன் போது குறித்த நபரின் சடலம் நீரில் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதையடுத்து பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்