
நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் மீது ஆயுதமேந்திய குழுவினர் தாக்குதல்!
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் பகுதியில் நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில் மீது ஆயுதமேந்திய குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குவெட்டாவிலிருந்து ராவல்பிண்டிக்குச் பயணித்துக்கொண்டிருந்த ஜாபர்கடுகதி ரயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பலோசிஸ்தான் விடுதலை இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ரயில் இயக்குனர் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
தாக்குதல் நடந்த இடத்திற்குப் பாதுகாப்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், ரயில் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் குறித்த ஆயுதமேந்திய குழுவினர் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.