
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்
மட்டக்களப்பு காலி, இரத்தினபுரி, எம்பிலிபிட்டிய மற்றும் அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கிழக்கு, ஊவா ஆகிய மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.