நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் வாக்காளர் அடையாள அட்டை இன்றியும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும் எனச் சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாட்டு இயக்கமான பெஃப்ரல் அறிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிப்பு இடம்பெறும் தினத்தன்று பகல் நாடு திரும்பும் வாக்காளர்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

தமது கடவுச்சீட்டை வாக்களிப்பு நிலையங்களில் காண்பித்து, குறித்த தினத்தில் நாடு திரும்பியதை உறுதிப்படுத்த முடியும் என்பதுடன், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பின் எவ்வித தடையுமின்றி வாக்களிக்க முடியும்.

எனவே, எவரும் வாக்காளர் அட்டை இன்றி வாக்களிக்க முடியாது என எண்ண வேண்டாம் என பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்யாராச்சி தெரிவித்துள்ளார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172