நமுனுகுலை – பசறை வீதி போக்குவரத்து தடை

-பதுளை நிருபர்-

பண்டாரவளையில் இருந்து நமுனுகுலை ஊடாக பசறை செல்லும் வீதி ஊடான போக்குவரத்து இன்று வியாழக் கிழமை தடைப்பட்டுள்ளது.

நமுனுகுலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 16 ஆம் கட்டைப் பகுதியில் பாரிய மரங்கள் வீதியில் விழுந்துள்ளமையினால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரங்களை அப்புறப்படுத்தி குறித்த வீதியை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.