
நண்பர்களுடன் கடலுக்கு நீராடச் சென்ற மாணவன் மாயம்
பெரியகல்லாறு பகுதியில் கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற மாணவன் கடலில்அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த பாலச்சந்திரன் லெஷான் (வயது – 17) என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த பகுதியில் மயானத்திற்குப் பின்னால் உள்ள கடற்கரையில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணியளவில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போது கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஏனைய இரு மாணவர்களும் கடற்கரையில் இருந்தவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கற்குடா கடற்படையினரின் உதவியுடன் தேடுதல் பணியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர். எனினும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் பணி ஆரம்பிக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
