தொடர்ந்தும் மாற்றத்திற்குள்ளாகும் தங்கத்தின் விலை
கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை வீழ்ச்சியடைந்த தங்கம் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் அதிகரித்துள்ளது.
அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 791,798 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராம் 27,930 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 223,450 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கம் ஒரு கிராம் 25,610 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 204,850 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,440 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 195,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.