தையிட்டியில் சிங்கள மக்களால் கேளிக்கைகுள்ளான போராட்டக்காரர்கள்

-யாழ் நிருபர்-

திஸ்ஸ விகாரையில் கஜினமகா உற்சவம் நேற்று ஞாயிற்று கிழமை மற்றும் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிலையில் சிங்கள மக்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக நேற்றைய தினம் காலை விகாரையை நோக்கி வரும்போது விகாரைக்கு அருகில் போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது “வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், தையிட்டி எங்கள் சொத்து, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்று” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட போது வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு வந்த சிங்கள மக்கள் போராட்டக்காரர்களுக்கு வெறுப்பூட்டும் விதத்தில் செயற்பட்டனர்.

மேலும் குறித்த பகுதியில் அதிகளவிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் போராட்டத்தில் ஈடுபடுகின்ற போராட்டக்காரர்களுக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றம் நேற்றையதினம் கட்டளை ஒன்றினை பிறப்பித்திருந்தது.

தையிட்டியில் சிங்கள மக்களால் கேளிக்கைகுள்ளான போராட்டக்காரர்கள்

தையிட்டியில் சிங்கள மக்களால் கேளிக்கைகுள்ளான போராட்டக்காரர்கள்

தையிட்டியில் சிங்கள மக்களால் கேளிக்கைகுள்ளான போராட்டக்காரர்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்