
தேசபந்துவுக்குப் பிணை
விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
டிசம்பர் 31, 2023 அன்று வெலிகமாவில் உள்ள ஒரு ஹோட்டல் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், கொலை செய்ய சதி செய்ததாக தேசபந்து தென்னகோன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.