
தெல்லிப்பளை வைத்தியசாலையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட நோயாளி!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம்-தெல்லிப்பளை மனநல சிகிச்சை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபர் இன்று செவ்வாய்க்கிழமை தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியைச் 35 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 02ஆம் திகதி சிகிச்சைக்கா குறித்த வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 07ஆம் திகதி வைத்தியசாலை 6ஆம் விடுதிக்கு பின்புறமாக வைத்து, அந்த வைத்தியசாலையில் பணிபுரியும் துப்பரவு பணியாளரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
இது குறித்தான முறைப்பாடு இன்றையதினம் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை தொடர்ந்து 36 வயதுடைய குறித்த இன்றையதினம் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.