தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு 159 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

54,710

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு 159 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sureshkumar
Srinath