தூயமல்லி அரிசி நன்மைகள்
🔶அந்த காலத்தில் வாழ்ந்த தமிழ்நாட்டை ஆண்ட குறுநில மன்னர்கள் அதிகமாக பயன்படுத்தி வந்த அரிசி எதுவென்றால் இந்த தூயமல்லி அரிசி தான். இந்த அரிசியின் சுவை எண்ணில் அடங்காதவை. அந்த அளவிற்கு சுவை கொண்டதாக இருக்கும்.
🔶தூய வெண்மை நிறத்தில் இருக்கக்கூடிய அரிசியை பார்த்தாலே எல்லோருக்கும் அப்படியே அள்ளி சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு வரும். அதுவும் இல்லத்தரசிகளுக்கு அரிசி பளபளவென இருக்க வேண்டும். அரிசியானது சீக்கிரத்தில் வேக வேண்டும் என்றும் நினைப்பார்கள். இத்தனை சிறப்புகளும் இந்த ஒரு அரிசியில் அடங்கியுள்ளதால் மக்களிடம் பெரும் வரவேற்பினை இந்த தூயமல்லி அரிசி பெற்றுள்ளது
🔶இந்த தூயமல்லி அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாச்சத்து, புரதச் சத்துக்கள் என்பன நிரம்பியுள்ளன. இவ்வாறான சத்துக்களைக் கொண்ட தூயமல்லி அரிசியின் எவ்வாறான நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை இப் பதிவின் மூலம் அறிந்துகொள்வோம்.
📍பித்தத்தினால் அடிக்கடி வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் போன்ற பிரச்சனை இருந்துக்கொண்டே இருக்கும். பித்தம் உடலில் அதிகம் இருப்பவர்கள் இந்த தூயமல்லி அரிசியால் சமைத்த உணவினை சாப்பிட்டு வர பித்தத்திலிருந்து நல்ல மாற்றம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் வாத பித்தம், கபம் போன்ற நோய்களும் குணமாகும்.
📍நரம்புகள் பலம் பெறுவதற்கு பெரும் உதவியாக இருக்கிறது இந்த தூயமல்லி அரிசி. வயதாகிவிட்டால் வெளி தோற்றம் மட்டும் முதிர்ச்சி அடையாமல் உள் உறுப்புகளும் முதிர்ச்சியடையும். இந்த பிரச்சனையை முற்றிலும் சரி செய்யக்கூடிய ஆற்றல் கொண்டதாக இந்த தூயமல்லி அரிசி காணப்படுகிறது.
📍தூயமல்லி அரிசியில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக நீரிழிவு நோயிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறது. இரத்தத்தையும் சுத்தப்படுத்தி உடலை புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்கிறது. இந்த அரிசியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
📍சிலருக்கு உணவு சாப்பிட பிறகு ஜீரணம் ஆகாமல் வாமிட்டிங் பிரச்சனை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் உணவில் இந்த அரிசியை எடுத்துக்கொள்வதால் மிக விரைவில் ஜீரணம் ஆகிவிடும்.
📍உடலானது நல்ல ஆற்றலுடன் இருந்தால் தான் எந்த ஒரு வேலையினையும் நாம் முழுமையாக செய்ய முடியும். அதற்கு நாம் சத்தான உணவு வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தூயமல்லி அரிசியானது உடலை வலுவாக வைத்துக்கொள்ள உதவுகிறது. தூயமல்லியின் அரிசி மட்டும் இல்லாது இதனுடைய தவிடும் மிகுந்த சக்தியினை கொண்டுள்ளது. இந்த அரிசியின் நீராகாரம் இளநீர் போன்ற சுவையுடன் இருக்கும். இதனால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக கிடைக்கிறது.
தூயமல்லி அரிசி நன்மைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்