
தபால் மூல வாக்காளர்களுக்கான புதிய அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்காளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி மார்ச் மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபாலில் ஏற்படக்கூடிய கால தாமதங்களையும் ,தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கவனத்திற் கொண்டு இந்த தீர்மானத்தைத் தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது.