தனியார் விடுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள மொழி பேசும் லால் பெரேரா (வயது – 61) என்கிற நபரே உயிரிழந்துள்ளார்.

மூன்று நாட்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்த நிலையில் அறைக்கு வெளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்