தனது பிள்ளையை வைத்து திருடிய தாய்
தனது பிள்ளையை வைத்து பணம் மற்றும் கைப்பேசிகளை திருடும் மோசடியில் ஈடுபட்ட தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுடன் தங்கியிருந்தவர்களின் கைப்பேசிகள் மற்றும் பணம் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பொது இடங்களில் தமது பிள்ளையை பயன்படுத்தி நீண்டகாலம் திருட்டில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்