
தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் கைது
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ள ப்பட்ட தீடீர் சுற்றிவளைப்பில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் அவர்கள் இணைந்து, யாழ்ப்பாணம் காங்கேசன் துறை வீதியிலுள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட 140 கிலோ எடையுள்ள வலையுடன், கடையின் உரிமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் புதன்கிழமை குறித்த பகுதியில் தீடீர் சுற்றிவளைப்பின்போது இடம்பெற்றது.
இதுதொடர்புடைய மேலதிக விசாரணைகளை கடற்றொழில் பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
