
டிரம்ப் வெற்றிபெறுவதற்கு அனுமதிக்க முடியாது
கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரான வர்த்தக போரில் வெற்றிபெறப்போவதாக சூளுரைத்துள்ளார்.
அமெரிக்கர்கள் தவறாக எடைபோடக்கூடாது ஹொக்கியை போல வர்த்தகப்போரிலும் அமெரிக்காவை தோற்கடிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள மார்க் கார்னி அமெரிக்காவின் வரிகளிற்கு பதில் வரிகளை விதிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
கனடா எதிர்கொள்ளும் புதிய சவால்களுக்கு புதிய திட்டங்களும் புதிய எண்ணங்களும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினைக்கு முடிவு கட்டி எங்களை ஐக்கியப்படுத்தும் புதிய தலைமைத்துவத்தை கனடா மக்கள் விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக தனது அரசாங்கம் புதிய திட்டத்தை முன்வைக்கும் என தெரிவித்துள்ள அவர் நம்பகதன்மை மிக்க வர்த்தக சகாக்களுடன் சிறந்த உறவை விரும்புவதாகவும் கனடாவின் எல்லைகளை பாதுகாக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் வரிசவால்கள் குறித்து குறிப்பிட்டுள்ள கனடாவின் புதிய தலைவர் அவர் வெற்றிபெறுவதற்கு அனுமதிக்க முடியாது அவர் வெற்றிபெறவிடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.