சில மாதங்களுக்கு முன் திருமணமான யுவதி மர்மமான முறையில் மரணம்

இங்கிரிய பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த திருமணமான யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இங்கிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

போதினாகல யஹலவத்த பகுதியைச் சேர்ந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமான 25 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவன் பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது சமயலறையில் மனைவி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு உடனடியாக இங்கிரிய பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

யுவதி விழுந்து கிடந்த சமையலறைக்கு அருகாமையில் உள்ள அறையொன்றில், சுவரில் இருந்து மின் குதை (பிளக் பொயின்ட்) ஒன்று கழற்று காணப்பட்டுள்ளதுடன் கடும் மழையின் போது மின்னல் தாக்கி குறித்த யுவதி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்