சிறுவர் இல்லத்தில் இருந்து காணாமல் போன 8 சிறுமிகள் கண்டுபிடிப்பு

காலி – மெட்டியகொட பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 8 சிறுமிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுவர் இல்லத்தில் இருந்த 13, 14 மற்றும் 17 வயதுடைய குறித்த சிறுமிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக மெட்டியகொட பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொலிஸார் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்து குறித்த சிறுமிகள் இன்று திங்கட்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்

குறித்த சிறுமிகளிடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்