
சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்பு
இலங்கையில் அண்மைக்காலமாக சிறுநீரக நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரக மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் அனுபமா டி சில்வா, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.