சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் புதிய கணக்காளர் நியமனம்

-சம்மாந்துறை நிருபர்-

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட நாள் தேவையாக இருந்த கணக்காளர் வெற்றிடத்திற்கு புதிய கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த எஸ். திருப்பிரகாசம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் டி.பிரபாசங்கர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை பதவியைப் பொறுப்பேற்றார்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கணக்காளர் இல்லாமை பற்றிய விடயம் பாராளுமன்றம், அமைச்சுக்கள் போன்ற பல இடங்களில் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

  • Beta

Beta feature

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24