சகோதரியின் வீட்டுக்கு தீ வைத்த சகோதரன் கைது

வத்துபிட்டிவல ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த இளைய சகோதரர் ஒருவர் தமது சகோதரியின் வீட்டிற்கு தீ வைத்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த 23 வயதானவரே இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதன்போது, வீடு முற்றாக எரிந்துள்ளதுடன், சகோதரியின் பிள்ளையினது பாடசாலை புத்தகங்கள், சீருடைகள் மற்றும் உபகரணங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்