கொள்ளையில் ஈடுபட்ட தம்பதியர் கைது

ஹொரவபொத்தானை பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதாக கருதப்படும் தம்பதியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை பிரதேசத்தில் வசிக்கும் இருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தம்பதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூன்று வீடுகளுக்குள் புகுந்து சொத்துக்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்