குடும்பத்தகராறு காரணமாக தீ வைத்த குடும்பஸ்தர்
பண்டாரகம ஹத்தாகொட பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தன்னுடன் சேர்த்து தனது முச்சக்கரவண்டிக்கும் தீ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக அந்நபர் இத்தவறான முடிவினை எடுத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது குறித்த நபர் கடுமையான தீக்காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் அவரது முச்சக்கரவண்டியும் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
குறித்த நபர் தற்போது ஹொரணை ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்