கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர கடமைகளை பொறுப்பேற்றார்!

 

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள சட்டத்தரணி வருண ஜெயசுந்தர, மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பணிமனையில் இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கந்தளாய் பிராந்தியங்களுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையை புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்கொண்ட பின்னர், கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

xc x

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24