காதல் விவகாரம்: தமிழ் இளைஞன் படுகொலை

கொழும்பில் இன்று சனிக்கிழமை தமிழ் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த சந்திரகுமார் விஜயகாந்த் (வயது – 27) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த மூவர் அடங்கிய குழுவினர் வீட்டிலிருந்த அந்த இளைஞரை வெளியே அழைத்து கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழுத்தில் பாரிய வெட்டுக்காயங்களுக்குள்ளான அந்த இளைஞரை அவரின் குடும்பத்தினர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.

காதல் விவகாரமே இந்தக் கொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையாளிகளைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்