கழிப்பறை இருக்கையில் சிறார்களின் ரகசிய படம்

விமான கழிப்பறைகளில் சிறார்களை ரகசியமாக படம்பிடித்ததாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றம் சாட்டப்பட்ட எஸ்டெஸ் கார்ட்டர் தாம்சன் III , தனது ஐபோனை கழிப்பறை இருக்கையில் மறைத்து வைத்து கழிப்பறைக்கு வரும் பயணிகளின் செயல்களை ரகசியமாக படம் பிடித்ததாக சொல்லப்படுகிறது.

குறித்த விமானத்தில், 2023ஆம் ஆண்டு 14 வயது சிறுமியை வீடியோ எடுத்த பிறகு இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. இதேபோன்று 7, 9 மற்றும் 11 வயதுடைய சிறுமிகளை இதேபோன்று வீடியோ எடுத்ததும் பின்னர் தெரியவந்தது.

கழிப்பறை இருக்கைக்கு அடியில் தனது ஐபோனை மறைத்து அவர் ரகசியமாக வீடியோக்களை பதிவு செய்து வந்துள்ளார். இதனையடுத்து வட கரோலினாவின் சார்லோட்டில் வசிக்கும் விமானப் பணிப்பெண் வீட்டைபொலீசார் சோதனை செய்தனர்.

சோதனையில் விமானப் பணிப்பெண்ணின் iCloud கணக்கிலிருந்து ஏராளமான ரகசிய வீடியோக்கள் மற்றும் குழந்தைகளின் ஆபாச படங்களை மீட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட குழந்தை ஆபாச படங்களை வைத்திருந்ததையும் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து செப்டம்பர் 2023 இல் ஒரு விமானத்தில் வைத்து விமானப் பணிப்பெண் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால்,விமானப் பணிப்பெண்ணுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், விமானத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24