கப்ரக வாகனத்திலிருந்து ஐஸ் மீட்பு: ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி – தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக ஏ 35 பிரதான வீதியில் பயணித்த கப்ரக வாகனத்தை சோதனையிட்ட நிலையில் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கப்ரக வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை சந்தேக நபரிடம் இருந்து 05கிராமம் 720 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடையப் பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.