கட்டுநாயக்கவில் இளைஞன் கைது

கட்டுநாயக்கவில் இளைஞன் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 7,600 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் எலபடகமவைச் சேர்ந்த 20 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக விமான நிலையப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும் – Batticaloa News