“கடன்பட்டு நகைகளை அடகு வைத்து செய்த நெற்பயிர் செய்கை” : நஷ்ட ஈடு வழங்குமாறு கோரிக்கை!

 

-கிண்ணியா நிருபர்-

சீரற்ற காலநிலை காரணமாக, கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால், பெரும் கஷ்டங்களை எதிர் நோக்குவதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500 க்கும் மேற்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.

“கடன்பட்டு, பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து செய்த நெற் பயிர் செய்கை, இம் முறை கனமழையால் நீநில் மூழ்கி அழிந்துள்ளதால் நஷ்டமடைந்துள்ளோம், அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும்” என கோரிக்கை விவசாயிகள் விடுக்கின்றனர்.