
கஞ்சாவுடன் இருவர் கைது
-யாழ் நிருபர்-
வட்டுக்கோட்டை பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் வட்டுக்கோட்டை வீதியூடாக முச்சக்கர வண்டியில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


