ஓடுபாதையிலிருந்து விலகிய விமானம்: பயணிகளுக்கு காயம்

இந்தோனேசியாவின் – பப்புவா பகுதியில் விமானமொன்று ஓடுபாதையிலிருந்து விலகிய நிலையில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ட்ரிங்கனா எயார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏரிஆர் – 42 விமானம் யப்பேன் தீவிலிருந்து பப்புவா தலைநகரின் ஜெயபுராவிற்கு புறப்படும்போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மலைகள் நிறைந்த பப்புவா பகுதியில் சீரற்ற வானிலையால் விமானப் பயணங்கள் அடிக்கடி பாதிக்கப்படும் சம்பவங்கள் பதிவாகிவருகின்றது.

முன்னதாக 2015ஆம் ஆண்டு ட்ரிங்கனா எயார் விமானம் விபத்துக்குள்ளானதில் 54 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.