ஐஸ் க்ரீம் ஏன் உருகுகிறது?

ஐஸ் க்ரீமை விரும்பி சாப்பிடாதவர் எவருமில்லை அதை வாங்கி கையில் எடுத்தாலே உருகிவிடுமல்லவா ?

அதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம்,

ஐஸ் க்ரீம் என்பது பிரதானமாக க்ரீம் மற்றும் சர்க்கரையைக் கொண்டதாகும்.

ஐஸ் க்ரீமை தயாரிக்கும் இயந்திரங்கள் அந்த சர்க்கரை பசையை குளிரூட்டப்பட்ட உருளையான பாத்திரத்தில் சுழற்றுகின்றன.

அந்த பாத்திரத்தின் உள் ஒரு உறைந்த தோல் உருவாகும், அது அகண்ட கரண்டி கொண்டு உரித்து எடுக்கப்படும்.

இதனால் ஐஸ் க்ரீமில் சமமற்ற அளவிலான ஐஸ் கட்டிகள் உருவாவது தவிர்க்கப்படும்.

நீங்கள் கடையிலிருந்து ஐஸ் க்ரீம் வாங்கி வீட்டுக்கு வருவதற்குள் ஐஸ் க்ரீம் சில நேரங்களில் சமமற்ற அமைப்பை கொண்டிருப்பதற்கு இதுவே காரணமாகும்.

ஐஸ் க்ரீம் தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டு, விற்பனையகங்களின் குளிரூட்டிகளைச் சென்றடையும் முன்பான நெடும் பயணத்தில், சற்று வெப்பமடைந்து, உருகி, பிறகு மீண்டும் குளிரூட்டப்படுகிறது.

இந்த போக்கில் அவற்றின் மீது சமமற்ற கட்டிகள் உருவாகிவிடும்.

ஐஸ் க்ரீமை அதன் முதல் குளிரூட்டியிலிருந்து, பூஜ்ஜியம் டிகிரிக்கு மேல் உள்ள வெப்பத்துக்கு மாற்றும் போது, இந்த பிரச்னை ஏற்படுவது வழக்கமாகும்.

ஐஸ் க்ரீம் இடம் மாற்றப்படும் போது உருகுவதை தவிர்ப்பதற்காக காரேகீனான் (ஒரு வித பாசியிலிருந்து கிடைப்பது) போன்ற பல்வேறு நிலைப்படுத்திகளை ஐஸ் க்ரீம் தயாரிப்பவர்கள் உபயோகப்பத்திவருகின்றனர்.

இதன் சரியான விளக்கம் என்னவென்றால்,

ஐஸ் கிரீம் அதற்குள்ளே நிறைய நீர் இருக்கும். அந்த நீர் தான் குளிர் பண்ணும்போது “பனி” மாதிரி ஆகுது.
ஆனா நம் சூழலோ, நம் கையைோ எப்போதும் வெப்பம் கொடுக்கும்.

வெப்பம் → பனிக்குள் செல்லும் பனி உருக ஆரம்பிக்கும்.

அதனால தான் ஐஸ் கிரீம் மெல்ல மெல்ல தண்ணீராக மாறிடும்.

அதாவது, பனி எப்படி சூரிய ஒளியில் உருகுதோ, அதே மாதிரி தான் ஐஸ் கிரீமும் உருகுது.