
எரிபொருள் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜயசேகர விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு அல்லது விற்பனை நடவடிக்கைகள் குறித்து அறியப்படுத்த தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 0742123123 என்ற எண்ணுக்கு சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு அல்லது விற்பனை நடவடிக்கைகளின் புகைப்படங்கள் அல்லது வீடியோ ஆதாரங்களை வாட்ஸ்அப் இல் அனுப்ப முடியும்.
அவ்வாறு அனுப்பும் பட்சத்தில் குறித்த நபர்களின் QR செயற்பாடு தற்காலிகமாக தடுக்கப்படும் மற்றும் குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.