எனது தந்தையே அடுத்த பிரதமர்: நாமல்
ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேநேரம் தாம் வெற்றி பெற்றால் எதிர்வரும் 22ஆம் திகதியே பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
தமது தரப்பினரின் ஒத்துழைப்புடன் இடைக்கால அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படும் என நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.